229
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி உற்சவம் இன்றுகாலை இடம்பெற்றது.
காலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து முத்துக்குமார சுவாமி இடப வாகனத்தில் எழுந்தருளி , உள் வீதியுலா வந்தார்.
கொரோனோ பெருந்தொற்று காரணமாக ஆலயத்தினுள் குறிப்பிட்ட தொகை பக்கதர்களை இறுக்கமான சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தியே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கந்தசஷ்டி உற்சவ காலங்களில் காலை, மாலை பூஜைகளை ஆலயத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் சனலில் ஒளிப்பரப்புவதாகவும், பக்தர்கள் வீடுகளில் இருந்து வழிபடுமாறு ஆலய நிர்வாக அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love