Home பிரதான செய்திகள்ஓய்வுபெறப் போவதாக பிராவோ அறிவிப்பு

ஓய்வுபெறப் போவதாக பிராவோ அறிவிப்பு

by admin

அவுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னா் இருபதுக்கு20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக மேற்கித்தியத் தீவுகள் அணி வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியுடன் இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பிராவோ முன்னரே தெரிவித்துவிட்ட போதிலும் நேற்று நடந்த, இலங்கையுடனான போட்டிக்கு பின்னா் அவா் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் கூறும்போது, “நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனது விளையாட்டு வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், எனது விளையாட்டு வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. கரீபியன் மக்கள் சார்பில் நாட்டுக்காக விளையாடியதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நாங்கள் எதிர்பார்த்த உலகக் கிண்ணம் அல்ல, வீரர்களாகிய நாங்கள் விரும்பிய உலகக் கிண்ணம் அல்ல. இது கடினமான போட்டி. அவுஸ்திரேலியாவுடன் நடக்கும் இருபதுக்கு20 உலகக் கிண்ணப் போட்டியுடன் இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” என்று தெரிவித்துள்ளாா்.

தேவையான நேரத்தில் சனலதுறை ஆட்டக்காரராக அவதாரம் எடுக்கும் பிராவோ மே.இ.தீவுகள் அணியின் மிகப்பெரிய பலமாக இருந்தார். மே.இ.தீவுகள் 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தினைக் கைப்பற்றிய அணியில் இடம் பெற்றிருந்த பிராவோ அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.

பிராவோ, மே.இ.தீவுகள் அணிக்காக 85 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளையும், 1,229 ஓட்டங்களையும் குவித்துள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் 2,968 ஓட்டங்களையும் 199 விக்கெட்டுகளையும், 40 டெஸ்ட் போட்டிகளில் 2,200ஓட்டங்களையும் 86 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளாா்.

சர்வதேசப் போட்டிகளில் ஓய்வை அறிவித்தாலும், லீக் போட்டிகளில் பிராவோ தொடர்ந்து விளையாடுவார் என தொிவித்துள்ள அவா் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More