152
ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சியரா லியோனில் பெட்ரோல் தாங்கி ஒன்று வெடித்ததில் 91 க்கும் மேற்ப டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் தாங்கி ஒன்றுடன் பார ஊர்த்தி மோதியதில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் எரிபொருள் சேமிப்பு கிடங்கும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love