கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று (08) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் இதனை தெரிவித்துள்ள அவா் சட்டமா அதிபரினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் ஊடாக தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொண்டமைக்கான செயலி (APP) ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும் குறித்த செயலி இல்லாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.