Home இலங்கையாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள்

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள்

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்திலுள்ள கணக்கியல், நிதிமுகாமைத்துவம் மற்றும் வணிகம் (கணக்கியலும், நிதியும்) ஆகிய துறைகளில் பயின்று சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்காக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 9 மணியளவில்,  யாழ். பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் தலைமையில் இடம்பெறவுள்ளது.  
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவரும், பட்டயக் கணக்காளருமான மனில் ஜெயசிங்கவும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஒப்பமிடவுள்ளனர்.   

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More