Home இலங்கைஎரிவாயு சிலிண்டா்கள் வெடிப்புக்கு இரசாயன செறிமான மாற்றம் காரணமல்ல

எரிவாயு சிலிண்டா்கள் வெடிப்புக்கு இரசாயன செறிமான மாற்றம் காரணமல்ல

by admin

இரசாயன செறிமானத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே, கடந்த சில நாட்களில் எரிவாயு சிலிண்டா்கள் வெடிப்பு ஏற்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அண்மையில், மக்டொனால்ட் உணவகத்தில் ஏற்பட்ட தீப் பரவலுக்கு, அந்த உணவகத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டு வெடித்தமையே காரணமாகும் எனவும் அச்சமயத்தில் , செயற்பாட்டிலிருந்த மின்சார உபகரணங்களிலிருந்து வெளியான தீப்பொறிகளும் அதற்குக் காரணமாகுமென்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், இரத்தினபுரி, அலவ்வ, வெலிகம ,கொட்டாவ பன்னிப்பிட்டிய உள்ளிட்ட சில பிரதேசங்களில் அறிக்கையிடப்பட்ட வெடிப்பு சம்பவங்களுக்கும் எரிவாயு கசிவே காரணமாகுமெனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More