Home இலங்கைஇன்றும் யாழிலும் தலவாக்கலையிலும் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது!

இன்றும் யாழிலும் தலவாக்கலையிலும் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது!

by admin

வட்டுக்கோட்டையில் வீடொன்றில்  எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது. எனினும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சுன்னாகம் கந்தரோடையில் உள்ள வீடு ஒன்றில் இதேபோன்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தலவாக்கலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் இன்று காலை  எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


தேநீர் தயாரிப்பதற்காக அன்று காலை பற்ற வைத்த பின்பு அதனை, அனர்த்திவிட்டு குறித்த நபர் வெளியில் சென்ற ஒரு நொடியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக மேற்படி நபர் தெரிவித்துள்ளார்.


வெடிப்பை அடுத்து அடுப்பு முழுமையாக சேதமமைந்துள்ளது , அதன்பின்னர் அ சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தாக வீட்டீன் உரிமையாளர் வேலுசாமி ஸ்ரீநாத் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் தலவாக்கலை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More