உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு உதவியமை மற்றும் சஹ்ரான் ஹசீமினால் நடத்தப்பட்ட வகுப்பில் கலந்து கொண்டதாக தொிவித்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.