Home இலங்கைநாடளாவிய ரீதியில் மின்தடை -சில மணி நேரங்களுக்குள் சீர் செய்யப்பட்டுவிடும் என தொிவிப்பு

நாடளாவிய ரீதியில் மின்தடை -சில மணி நேரங்களுக்குள் சீர் செய்யப்பட்டுவிடும் என தொிவிப்பு

by admin

இலங்கையில் நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் விநியோக கட்டமைப்பில் ஏற்ட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்வாறு நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மின்சாரத் தடை காரணமாக கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்தில் இருந்து புறப்படும் புகையிரதசேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை காரணமாக புகையிரத சமிக்ஞைகளில் ஏற்பட்டுள்ள செயலிழப்பு காரணமாகவே குறித்த புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின்சாரத் தடை காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கான நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பின் சில பகுதிகளில் தற்போது மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தொிவித்துள்ள இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நாடாளாவிய ரீதியில் சில மணி நேரங்களுக்குள் சீர் செய்யப்பட்டுவிடும் எனவும் தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More