Home பிரதான செய்திகள் 2 வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி

2 வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி

by admin

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடை யிலான 2 வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாவது இன்னிங்சில் 253 ஓட்டங்களும் இரண்டாவது இன்னிங்சில் 132 ஓட்டங்களும் பெற்றிருந்தது.

இலங்கை அணி முதலாவது இன்னிங்சில் 204 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்ிகு 345 ஓட்டங்களை எடுத்து 164 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது

இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 2 வது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காது 155 ஓட்டங்களை பெற்றிருந்தாா் குறிப்பிடத்தக்கது.

முதலாவது போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில், இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More