Home இலங்கைடயகம – ஹட்டன் ஆறுகளிலிருந்து பெண்களின் சடலங்கள் மீட்பு

டயகம – ஹட்டன் ஆறுகளிலிருந்து பெண்களின் சடலங்கள் மீட்பு

by admin

(க.கிஷாந்தன்)

டயகம காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று நேற்று (06.12.2021) மாலை மீட்கப்பட்டதாக டயகம காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய  சாமிநாதன் தங்கேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள் உடனடியாக காவல்துறையிருக்கு அறிவித்ததனையடுத்து சம்பவ ஸ்தலத்திற்கு சென்ற டயகம காவல்துறையினா் சடலத்தை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் டயகம காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனர்.

அதேவேளை ஹட்டன் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ஸ்டிதரன் தோட்டம் புருட்ஹில் பிரிவில் உள்ள மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ஹட்டன் ஓயாவிலிருந்து இன்று (07.12.2021 ) காலை 09.00 மணியளவில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக ஹட்டன் காவல்துறையினா் தெரிவித்தனர்.

சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் ஹட்டன் காவல்துறையினருக்கு அறிவித்ததனையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் சுமார் 50ற்கும் 60ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க மீட்கப்பட்ட குறித்த  சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தொிவித்துள்ளனா்.

. மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல்துறையினா் மேலும் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More