Home இலங்கைவிபத்தில் சிக்கிய ஆசிரியர் – 11 நாட்களின் பின் உயிரிழப்பு!

விபத்தில் சிக்கிய ஆசிரியர் – 11 நாட்களின் பின் உயிரிழப்பு!

by admin

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த ஆசிரியர் 11 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி இந்துக்கல்லூரி ஆசிரியரான மீசாலையை சேர்ந்த கந்தசாமி சுதாஸ்கரன் (வயது 35) என்பவரே உயிரிழந்திருந்தார். 


கடந்த 28ஆம் திகதி யாழ்ப்பாணம் மீசாலை , புத்தூர் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு , வீதியை கடப்பதற்காக காத்திருந்த வேளை , சாவகச்சேரி பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்திருந்தார். 


படுகாயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் , கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More