Home இலங்கைநல்லூர் சிவன் கோவிலில் பிரம்ம சிரச்சேத உற்சவம்

நல்லூர் சிவன் கோவிலில் பிரம்ம சிரச்சேத உற்சவம்

by admin

புராண கதைகளில் பிரமனின் தலையை சிவபெருமான் கிள்ளும் கதையை சித்தரிக்கும் திருவிழா , நல்லூர் சிவன் கோவிலில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. நல்லூர் சிவன் கோவில் மகோற்சவம் நடைபெற்று வருகிற நிலையில் நேற்றைய தினம் குறித்த திருவிழா நடைபெற்றது. 

படைக்கும் கடவுளான பிரமனுக்கு முன்னதாக ஐந்து தலைகள் இருந்ததாகவும் , அதனால் , பிரமன் ஆணவத்துடன் காணப்பட்டதால் , சிவ பெருமான் பிரமனின் ஆணவத்தை நீக்கும் முகமாக அவரின் ஒரு தலையை கிள்ளியதாகவும் ” ‘பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒரு தலை கிள்ளியே.. ” என புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. அக்கதையினை சித்தரிக்கும் வகையிலையே குறித்த திருவிழா நடைபெற்றது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More