இரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில், சீன உரத்திற்கான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நீதி அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரால் அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் நேற்று (13.12.21) கூடிய அமைச்சரவையில் இவ்வாறான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
சீன சேதனப் பசளை தொகையைக் கொண்டு சென்ற கப்பலுக்கு சுமார் 08 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவது தொடர்பாக இரு அமைச்சரவைப் பத்திரங்கள் நேற்று (13.12.21) மாலை கூடிய அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த நிலையில் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் நியமங்களுக்கு அமைவாக உர இருப்புக்களை மீண்டும் உற்பத்தி செய்யுமாறு நிறுவனத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய சீன நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.