Home இலங்கைவருட இறுதி விடுமுறையை கழிப்பதற்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி முக்கியஸ்த்தர்கள் ஆயத்தம்!

வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி முக்கியஸ்த்தர்கள் ஆயத்தம்!

by admin

சுமார் 60 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு செல்ல தயாராகும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் மற்றும் படிக்கும் தமது பிள்ளைகளைப் பார்க்க, விடுமுறை நாட்களில் அந்த நாடுகளுக்கு பயணம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றுமொரு குழு, தமது விடுமுறையை நுவரெலியாவில் கழிக்க திட்டமிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெனரல் ஹவுஸ் என்ற விடுதியில் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More