175
ஊர்காவற்துறை கடற்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் புதன்கிழமை கரையொதுங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நயினாதீவை சேர்ந்த நடராசா தர்மபாலன் (வயது 58) என்பவரே என அவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் , கடந்த 09ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் காணாமல் போயிருந்ததாகவும் உறவினர்கள் காவல்துறையினாின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love