Home உலகம்ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பரவல் – 33 பேர் பலி

ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பரவல் – 33 பேர் பலி

by admin

ஜப்பானின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

8 மாடிகளை கொண்ட குறித்த அடுக்குமாடி கட்டிடத்தில் மருத்துவமனை, பாடசாலைகள் உட்பட பல்வேறு வணிக வளாகங்களும் செயல்பட்டு வருகின்ற நிலையில் இன்று காலை அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் கட்டிடத்தில் உள்ள வணிக வளாகங்களில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கட்டிடத்தில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வும் தொிவித்துள்ள அந்நாட்டு காவல்துறையினா் தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தொிவித்துள்ளனா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More