Home இலங்கைகுடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடியவர் விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்

குடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடியவர் விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்

by admin

மழைக்கு குடை பிடித்தவாறு மோட்டார் சைக்கிளில் ஓடி சென்றவர் நிலைதடுமாறி மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 


மழை பெய்துகொண்டு இருந்ததால் , மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் , குடை பிடித்தவாறு பயணித்துள்ளார். அதன் போது ,திடீரென வீசிய காற்றினால் , குடையுடன் மோட்டார் சைக்கிளில் ஓட்டி , நிலை தடுமாறி எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானர். 


அதில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் , அவர்களுடன் மோதி விபத்துக்குள்ளானவருமாக மூவர் காயமடைந்த நிலையில் , சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More