Home இலங்கை3 மாதங்களாக தலைமறைவாகிய வாள் வெட்டுத்தாக்குதலாளி கைது!

3 மாதங்களாக தலைமறைவாகிய வாள் வெட்டுத்தாக்குதலாளி கைது!

by admin

யாழ்.ஊர்காவற்றுறை – நாரந்தனை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 26 வயதான நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்ரெம்பர் மாதம் 23ம் திகதி நாரந்தனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், தாக்குதலாளி தலைமறைவாகி இருந்தார்.

அந்நிலையில் , கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றய தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கைது செய்யப்பட்டவரிடம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More