Home இலங்கைநான்கு தலைமுறைகளை கண்ட மூதாட்டி காலமானார்.

நான்கு தலைமுறைகளை கண்ட மூதாட்டி காலமானார்.

by admin

நான்கு தலைமுறைகளை கண்ட சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதி , சப்பச்சிமாவடியைச் சேர்ந்த லட்சுமி தம்பிப்பிள்ளை தனது 105ஆவது வயதில் நேற்றைய தினம்காலமானார். 

கடந்த 1916ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி பிறந்த இவர் ,  சரியான நேரத்திற்கு உணவு உண்ணும் பழக்கம் உடையவர். இதுவரை எந்தவிதமான நோய் நொடிகளுமின்றி சுகதேகியாக வாழ்ந்து வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலமானார். 


இவரது கணவர் 1901ஆம் ஆண்டு பிறந்து தனது 90 ஆவது வயதில் 1990ஆம் ஆண்டு காலமானர். அதன் பின்னர் தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என வாழ்ந்து வந்தார்.  இவருக்கு 10 பிள்ளைகள் (5 ஆண் பிள்ளைகளும் 5 பெண் பிள்ளைகளும் ) 45 பேரப்பிள்ளைகளும், 83 பூட்டப் பிள்ளைகளும், 12 கொள்ளுப் பேரப்பிள்ளைகளுமாக 150 பேர் இவரின் பரம்பரையாகும்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More