Home இலங்கைமன்னாாில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.

மன்னாாில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.

by admin

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் குடும்பஸ்தர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு  பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வருகின்றது.


குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26) காலை 11 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் காவல்துறையினா் சடலத்தை மீட்டுள்ளனர். 
சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றது. இதே வேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More