Home இலங்கைசுதந்திரத்திற்குப் பின் அரசாங்கம் டொலர் பிச்சை எடுக்கிறது!

சுதந்திரத்திற்குப் பின் அரசாங்கம் டொலர் பிச்சை எடுக்கிறது!

by admin

அரசாங்கம் தனது இயலாமையை மூடிமறைக்க ஜனாதிபதி, அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றிகொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்களையோ அல்லது ஜனாதிபதியின் செயலாளர்களையோ மாற்றுவதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டு மக்கள் மூன்று வேளை உண்ண முடியாத நிலைக்கு வந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு நிறைவடையும்போது சுற்றுலாத்துறையின் ஊடாக 3.5 பில்லியன் டொலர்கள் நாட்டுக்குக் கிடைக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் சிரித்துகொண்டே கூறுகிறார். ஆனால் உண்மையில் அரசாங்கம் டொலர்களுக்காக வெளிநாடுகளில் பிச்சை எடுக்கிறது எனவும் தெரிவித்தார்.

நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும், தற்போதைய அரசாங்கம்போல வெளிநாடுகளுக்கு சென்று டொலர் பிச்சை எடுத்ததில்லை எனவும் அவர் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More