Home பிரதான செய்திகள்ரோஸ் டெய்லர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

ரோஸ் டெய்லர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

by admin

பிரபல நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லர் (Ross Taylor) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  எதிா்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ள பங்களாதேஸ் அணிக்கு எதிரான நியூசிலாந் அணியின் டெஸ்ட் தொடருக்கு பின்னா் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவா் அறிவித்துள்ளாா்.

மேலும் அடுத்த ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான நியூசிலாந்தின் ஒருநாள் தொடருக்கு பின்னா் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவா் அறிவித்துள்ளார்.

37 வயதாகும் ரோஸ் டெய்லர் இதுவரை 445 சர்வதேச போட்டிகளில் விளையாடி 18,074 ஓட்டங்களை எடுத்த அவர் 40 சதங்களை அடித்துள்ளார். மூன்று வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையையும் ரோஸ் டெய்லர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More