Home இலங்கைஇந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது.

இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது.

by admin


டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடன் பணமாக பெறப்படாமல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது

எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும் பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் வழங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இந்திய அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாக இந்த கடன் வசதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, அண்மையில் சீனாவிடமிருந்து 150 கோடி அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதாகவும், கடனாக ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் கட்டாரில் இருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களை பெறவுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள்கள் வெளியாகி உள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More