தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறி, வானத்தில் தோன்றியுள்ள கரும் புகை வீடியோ காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளன.
கூரை மற்றும் தேசிய சட்டமன்ற கட்டிடம் ஆகியன தீப்பிடித்துள்ளது எனவும் தீ கட்டுக்குள் வரவில்லை எனவும் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் நகரின் அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாா்.
பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் இறுதிச் சடங்கு நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற சில மணிநேரங்களுக்குப் பின்னா் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.