Home இலங்கையாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலர் சந்திப்பு

யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மாவட்ட செயலர் சந்திப்பு

by admin

யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் செனரத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் ( 7 ) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது . குறித்த சந்திப்பில் , யாழ் . மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி ) திரு.எஸ்.முரளிதரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் திருமதி எஸ்.சி.என்.கமலராஜன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர் . 


குறித்த சந்திப்பில் பொதுவான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக யாழ் . மாவட்டத்தில் இராணுவத்தினரால் மக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் கொரோனா இடர்காலத்தில் மக்கள் நலனுக்காக இணைந்து செயற்பட்டமைக்காக மாவட்ட அரசாங்க அதிபர் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார் . 
மேலும் , விவசாய நடவடிக்கைகளில் சேதனப்பசளை உற்பத்தி நடவடிக்கைகள் , வீதி அபிவிருத்தி , நகர சுத்தப்படுத்தல்கள் , மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன . 


அத்துடன், மக்களின் முன்னேற்றம் கருதி அபிவிருத்திக்காக தங்களாலான முழுமையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வழங்க தயாராக இருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More