Home இலங்கைவலி கிழக்கு பிரதேச சபையில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலி கிழக்கு பிரதேச சபையில் கவனயீர்ப்பு போராட்டம்!

by admin

வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுபட்டது.கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதில்  அமைக்கப்படுவது  தொடர்பில் கிடைக்கப்பெற்ற  முறைப்பாடு தொடர்பில் பார்வையிட செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்  அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.


அங்கு மதில் அமைத்தவர் செயலாளரை அச்சுறுத்தி அவருடைய கைத்தொலைபேசியை பறித்து உடைத்து, தொலைபேசியை எடுத்து சென்றுள்ளார். அது தொடர்பில் அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


குறித்த நபர் வெளிநாட்டு பிரஜை எனவும் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய கோரி இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More