Home இலங்கைதனியார் பேருந்து உரிமையாளர் சங்கானை குளத்தில் சடலமாக மீட்பு

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கானை குளத்தில் சடலமாக மீட்பு

by admin

தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் மூன்று நாள்களாகக் காணாமற்போன நிலையில் சங்கானை மண்டிகைக் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகலைச் சேர்ந்த கடம்பன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார்.


உள்ளூர் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளரான அவர் மூன்று நாள்களாக காணாமற்போயிருந்தார் என்று இளவாலை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்த நிலையில் அவரது சடலம் இன்று பிற்பகல் சங்கானை மண்டிகைக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More