Home இந்தியாமருத்துவமனையில் குவியல் குவியலாக சிசுக்களின் எலும்புக்கூடுகள்

மருத்துவமனையில் குவியல் குவியலாக சிசுக்களின் எலும்புக்கூடுகள்

by admin

மும்பை மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்தில் அர்வி என்ற பகுதியில் செயற்பட்டு வரும் தனியாாா் மருத்துவமனை ஒன்றின் பயோகாஸ் தொட்டியில் 11 சிசுக்களின் மண்டை ஓடுகள், 56 எலும்புகள் கண்டறியப்பட்ட சம்பவம் தொடா்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

குறித்த தனியார் மருத்துவமனையில் 13 வயது சிறுமி ஒருவருக்குச் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக அம்மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினா் அங்கிருந்த மருத்துவமனைக்குச் சொந்தமான பயோகாஸ் தொழிற்சாலையிலும் சோதனை நடத்தினர்.

அங்கிருந்த பயோகேஸ் தொட்டியில் இறங்கி ஆய்வு செய்த போது உள்ளே மொத்தம் 11 சிசுக்களின் மண்டை ஓடுகள், 56 எலும்புகள் ஆகியவற்றை அங்கிருந்து எடுத்துள்ளனர். இதையடுத்து அவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவை சட்டப்பூர்வமாக நடத்தப்பட்ட கருக்கலைப்பின் எலும்புகளா அல்லது சட்டவிரோத கருக்கலைப்பின் எலும்புகளா என்பது குறித்து காவல்துறையினா் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

13 வயது சிறுமிக்குச் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ததாக அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஒருவா் மற்றும் செவிலியர்களை கைது செய்துள்ள காவல்துறையினா் சிறுமியைக் கர்ப்பமாக்கிய 11 வயது சிறுவனின் பெற்றோரையும் கைது செய்துள்ளனர்

சிறுவனின் பெற்றோா்ி சிறுமியின் பெற்றோரைக் கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டியதாகவும் அதற்குத் தேவையான பணத்தையும் கொடுத்துள்ளதாகவும் தொிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More