நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த நவம்பர் 25ம் திகதி திரையரங்குகளில் வெளியான மாநாடு படம் தற்போது 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இப் படம் நோர்வே தமிழ் திரைப்பட திருவிழாவில் 4 விருதுகளை கைப்பற்றியுள்ளது. சிறந்த இயக்குநராக வெங்கட் பிரபு, சிறந்த வில்லனாக எஸ்ஜே சூர்யா, சிறந்த இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா மற்றும் சிறந்த எடிட்டிங்கிற்காக பிரவீன் ஆகியோருக்கு இவ்வாறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் படத்தில் நடித்த ஒய்ஜி மகேந்திரனுக்கு கலைச்சிகரம் விருது வழங்கப்பட்டுள்ளது.
மன்மதன் படத்திற்கு பிறகு சிம்புவின் நடிப்பில் வெளியான சிறப்பான படமாக இந்தப் படம் அமைந்துள்ளதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த விருதுகளை படம் குவித்துள்ளது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு நோர்வே தமிழ் திரைப்பட விழா குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

