தடையற்ற எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது சாத்தியமற்ற மட்டத்தை எட்டுகிறது என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மீதமுள்ள ஜனவரி மாதம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் எச்சரித்தார்.
இதுவரை தாங்கள் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்த போதும் நாளுக்கு நாள் நிலைமை சாத்தியமில்லாத கட்டத்தை நெருங்கி வருவதை இப்போது உணர்வதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் இன்னும் 20 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ள நிலையில், பெற்றோல் மற்றும் டீசலின் சில்லறைத் தேவைக்காக வெளிநாட்டு நாணயத்தைப் பாதுகாப்பதில் சிரமம் உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு டீசல் மற்றும் உலை எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு கடன் கடிதங்களை திறக்க வேண்டும் எனவும் பெற்றோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனைக்குத் தேவையான வெளிநாட்டு நாணயத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பின்னணியில், மின்சார சபையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கை மின்சார சபைக்கும் டொலர்களைத் தேடும் சுமையை தன்னால் ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
மின்சார சபைக்குத் தேவையான எண்ணெயை வழங்குவதற்காக , மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் மின்சார சபையிடம் டொலர்களை பெற்றுக்கொள்ளுமாறு தான் கோரிக்கை விடுத்தாகவும் அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
கடன் கடிதங்கள் அடுத்த வாரம் திறக்கப்படும் எனவும் அவர்கள் டொலர்களை கொள்வனவு செய்யும் நிலையில் இருக்கிறார்களா என்பது அடுத்த வாரத்தில் பரிசோதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
நாடு இரண்டு கடன் வரிகளை நாடுகிறது என்று கூறிய அமைச்சர், ஏற்றுமதிக்கான ஆறு மாத கடன் மூலம் பெற்றோ சைனா வழங்கிய ஆதரவையும் ஒப்புக்கொண்டார்.
எவ்வாறாயினும், ஆறு மாத கடன் வரி இருந்த போதிலும், அந்த ஏற்றுமதிகளுக்கான கடன் கடிதங்களை இலங்கையால் திறக்க முடியவில்லை என்றும் அவர் வெளிப்படுத்தினார்.
சில சமயங்களில் தங்கள் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருக்கும் ஆனால் சரக்குகளுக்கான கடன் கடிதங்களைகளை திறக்க தாங்கள் இன்னும் சிரமப்படுகிவதாகவும் தெரிவித்தார்.
தங்களின் எரிபொருள் கட்டணத்தை பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு 400 மில்லியன் டொலர்கள் தேவை, இது தங்களின் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 40% என்று அமைச்சர் குறிப்பிட்டார்.