Home உலகம்ஆப்கானிஸ்தான் நிலநடுக்கங்களில் 22 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கங்களில் 22 பேர் பலி

by admin

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மாகாணமான பாட்கிஸ் பகுதியில் திங்கள் கிழமை 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் சங்கம் தொிவித்துள்ளது.

மாகாண தலைநகரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில், 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் . இதுவரை குறைந்தபட்சம் நான்கு குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகலில் முதலாவது நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னா் 2வது நில நடுக்கமும் ஏற்பட்டுள்ளது. காதிஸ் மற்றும் முகர் மாவட்டங்களில் அதிகமாக இந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன, ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் மேற்படி பகுதிகளின் பல குடியிருப்புகள் உறுதியானதாக இல்லை எனத் தொிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More