Home இலங்கையாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சத்திர சிகிச்சை – அதிக இரத்தப் போக்கால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சத்திர சிகிச்சை – அதிக இரத்தப் போக்கால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணம் தனியார் மருத்துமனையில் இடம்பெற்ற இருதய சத்திரசிகிச்சையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திருநெல்வேலி நொதேர்ன் தனியார் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இருதய வால்வு சத்திரசிகிச்சையின் போதே உயிரிழப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்வேலியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இருதய வால்வு சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட அதிகளவு குருதிப் போக்கே உயிரிழப்புக் காரணம் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சகல வசதிகளுடன் கூடிய இருதய அறுவைச் சிகிச்சை கூடம் உள்ள போதும் மாதத்தில் குறிப்பிட்டளவு சத்திரசிக்சையே மேற்கொள்ளப்படும் நிலையில், நோயாளர்கள் தமது வசதிக்கு ஏற்ற வகையில்,  தனியார் மருத்துவமனையை நாடும் நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More