Home இலங்கைகச்சத்தீவு புனித அந்தோனியார் உற்சவத்திற்கு இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை

கச்சத்தீவு புனித அந்தோனியார் உற்சவத்திற்கு இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை

by admin

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்கு, இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் பரவிவரும் ஒமிக்ரோன் தொற்று மற்றும் அங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவற்றை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளாா்.

அந்தவகையில் இலங்கை சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட சுமார் 500 இலங்கை யாத்திரிகர்களுடன் இம்முறை உற்சவம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை மார்ச் மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More