Home இலங்கைவீட்டில் தனித்திருந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு

வீட்டில் தனித்திருந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு

by admin

வீட்டில்  தனித்திருந்த 7 பிள்ளைகளின் தாயான வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (27) அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது காவல்துறைப்பிரிவில் உள்ள சாய்ந்தமருது 15 ஆம் பிரிவு  புதுப்பள்ளி வீதியில் இடம்பெற்றுள்ளது.


81 வயது மதிக்கத்தக்க. சுலைமான் செய்யது புகாரி என்றி குறித்த பெண்ணே  சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன.
இவ்வாறு   சடலமாக மீட்கப்பட்டவரின் தலைபகுதியில் காயம் ஒன்று காணப்படுவதுடன் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


உயிரிழந்த பெண்ணின் பிள்ளைகள் திருமணம் முடித்து பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருவதுடன் இவ்வாறு மேற்குறித்த வீட்டில் தனித்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More