Home பிரதான செய்திகள்ஐபிஎல் – இறுதிப் பட்டியலில் 590 வீரர்கள்

ஐபிஎல் – இறுதிப் பட்டியலில் 590 வீரர்கள்

by admin

ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வீரர்களை ஏலம் விடும் நிகழ்வு பெங்களூருவில் எதிா்வரும் 12, 13-ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த வருடம் ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

இந்தநிலையில் ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1,214 வீரர்கள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் பிசிசிஐ நேற்று வெளியிட்ட ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களில் 228 சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் டில் விளையாடாத 355 வீரர்களும் உள்ளடங்குகின்றனா். இதில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். 48 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ. 2 கோடியாக உள்ளது. 20 பேருக்கு ரூ.1.50 கோடி அடிப்படை விலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More