Home இலங்கைபசில் ராஜபக்ஸ தலைமையில் புதிய குழு!

பசில் ராஜபக்ஸ தலைமையில் புதிய குழு!

by admin

சுங்கத்தின் வசமுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் தலைமையில் புதிய குழுவொன்றை நியமிக்கவும் ஜனாதிபதியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (07.02.22) நடைபெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தின் போது உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்கான உரிய திட்டமிடல்களை வகுக்குமாறு ஜனாதிபதியினால் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் இதன்போது குறுகிய எண்ணங்களுடன் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கோ அல்லது பொருட்களை பதுக்கிவைப்பதற்கோ இடமளிக்கக் கூடாதெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாக தயாரிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்திய ஜனாதிபதி, இது தொடர்பான ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் மேற்பார்வை பணிகள் புதிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More