Home இலங்கைபுதையல் தோண்டிய ஒருவர் கைது – 06 போ் தப்பியோட்டம்

புதையல் தோண்டிய ஒருவர் கைது – 06 போ் தப்பியோட்டம்

by admin

அடம்பன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை(15)  மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும் அடம்பன் காவல்துறையினர் இணைந்து குருவில் வான் பகுதியில்  சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

.
இதன் போது குறித்த பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் ஆறு போ் தப்பிச் சென்றுள்ளனர். புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதி பொருட்கள் இராணுவம் மற்றும்காவல்துறையினர் மீட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது அடம்பன் காவல நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடம்பன் காவல்நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.  தப்பியோடிய சந்தேக நபர்களை காவல்துறையினா் தேடி வருகின்றனர். மேலதிக விசாரணைகளை அடம்பன் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More