Home இலங்கைகொழும்பு பேராயர் புனித பாப்பரசரை சந்திக்கிறார்!

கொழும்பு பேராயர் புனித பாப்பரசரை சந்திக்கிறார்!

by admin

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (28) வத்திக்கானில் உள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் தரப்பு தெரிவித்துள்ளது.

ரோம் நேரப்படி காலை 11 மணிக்கு இடம்பெற உள்ள இந்த சந்திப்பில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் குறித்து இருவரும் கலந்துரையாடுவார்கள் என வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து பேராயர் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சர்வதேச உதவியை நாட கடந்த 24 ஆம்திகதி கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விசேட தூதுக்குழுவினருடன் வத்திகான் நோக்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More