
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் கிழக்கு சனசமூக மண்டபத்திற்கு அருகாமையில் காணியை சுத்தம் செய்து கொண்டிருந்த பொதுமகன் ஒருவர் அதனைக் கண்டுபிடித்து முல்லைத்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற முல்லைத்தீவு காவல்துறையினர் அங்கு அகழ்வு பணிகளை மேற்கொண்டபோது 176 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
மேலும், குறித்த பகுதிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் மேலதிக அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு காவல்துறையினா் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் உத்தரவினைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
Spread the love
Add Comment