Home இலங்கைஅமைச்சரவையில் மாற்றம் – கம்மன்பில -விமல் – வாசுதேவ பதவிநீக்கம்

அமைச்சரவையில் மாற்றம் – கம்மன்பில -விமல் – வாசுதேவ பதவிநீக்கம்

by admin

அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோா் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஜவினால் அமைச்சரவையில் திடீரென அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க , பவித்ரா வன்னியாராச்சி, தினேஷ் குணவர்தன மற்றும் காமினி லொகுகே ஆகியோருக்கு புதிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமல் வீரவன்ச வகித்து வந்த கைத்தொழில் அமைச்சர் பதவி, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதய கம்மன்பில வகித்து வந்த மின்சக்தி அமைச்சர் பதவி, எரிசக்தி அமைச்சராக பதவி வகித்த காமினி லொக்குகேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரின் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு கல்வி அமைச்சர் பதவியும், திலும் அமுனுகமவுக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியும், பவித்ரா வன்னியாராச்சிக்கு எரிசக்தி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

பவித்ரா வன்னியாராச்சி தற்போது போக்குவரத்து அமைச்சராகவும் தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் காமினி லொகுகே மின்சக்தி அமைச்சராகவும் தற்போது பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More