Home உலகம்BBC, Google, FB, Play store உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ரஸ்யாவில் தடை!

BBC, Google, FB, Play store உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ரஸ்யாவில் தடை!

by admin

உலக நாடுகள் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது அடுத்தடுத்துத் தடை விதித்து வந்த நிலையில், இன்று விளாடிமிர் புதின் தலைமையிலான ரஸ்ய அரசு, பல வெளிநாட்டு நிறுவனங்கள் மீதும், மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக விளங்கும் ஊடக நிறுவனங்களின் தளங்களையும் முடக்கியுள்ளது. இதனால் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சேவையை ரஸ்யாவில் தடை செய்யப்பட்டு உள்ளன.


உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்து ரஸ்ய அரசை விமர்சனம் செய்த பிபிசி ரஸ்ய தளத்தைத் தற்போது ரஸ்யாவில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ரஸ்ய அரசு பிபிசி ரஸ்யா தளத்தை முடக்கியுள்ளதாக எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதேபோல் உக்ரைன் மீது ரஸ்யாவின் போர் அறிவிப்புக்குப் பின்பு பேஸ்புக் ரஸ்யாவின் அரசு செய்தி தளம் மற்றும் பிற அரசு சார்ந்த பக்கங்களுக்கு விளம்பரம் மற்றும் வருமானம் ஈட்டும் சேவையை முடக்கியது. தற்போது ரஸ்யாவில் மொத்தமாகப் பேஸ்புக் தளம் முடங்கியுள்ளது. இதன் மூலம் ரஸ்யாவில் யாராலும் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்த முடியவில்லை.


இதோடு கூகுள் ப்ளே ஸ்டோர், ஒன்லைன் செய்தி தளமான Meduza, Liberty என்னும் ரோடியோ தளம், Deutsche Welle எனப் பல மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக விளங்கும் நிறுவனங்கள் மீது விதித்து உள்ளது.

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு பற்றித் தவறான தகவல் கொண்ட தளத்தில் விளம்பரங்கள் காட்டுவதை நிறுத்து ரஸ்ய கட்டுப்பாட்டு அமைப்பு கோரிய நிலையில், கூகுள் மொத்தமாக விளம்பர சேவையைத் தடை செய்துள்ளது. கூகுள் முதல் முறையாக ஒரு நாட்டில் விளம்பர வர்த்தகத்தையும் கூகுள் ப்ளே ஸ்டோரையும் மொத்தமாகத் தடை செய்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More