Home இலங்கைவவுனியாவில் விபத்தில் தந்தையும் மகனும் பலி

வவுனியாவில் விபத்தில் தந்தையும் மகனும் பலி

by admin

வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை பேரூந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலியாகியுள்ளனா்.

உள்ளூர் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிள் ஏற முற்பட்ட போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் பேரூந்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிழந்துள்ளார்

இதனையடுத்து அப்பகுதி மக்கள் இணைந்து பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு பேரூந்தின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர் இதனால் அப்பகுதில் பதட்ட நிலமை நிலவியதுடன் பூவரசங்குளம் காவல்துறையினா் நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்

இவ் விபத்தில் 35 வயதுடைய தந்தை மற்றும் 17 வயதுடைய அவரது மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More