Home இலங்கைபுத்தூரில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு

புத்தூரில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு

by admin

யாழ் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழந்துள்ளனர். புத்தூர் பகுதியை சேர்ந்த குகபிரகாசம் ( வயது 59) அவரது மனைவியான சுகுணா (வயது 55) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.


வீட்டில் உள்ள நீர் தொட்டியில் மனைவி நீர் அள்ளும் போது மின்சாரம் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற முயன்ற வேளை கணவனும் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியதில் உயிரிழந்ததாகவும்ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More