Home இந்தியாரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி நெருக்கடியில் உதவும் இந்தியா

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி நெருக்கடியில் உதவும் இந்தியா

by admin

மேற்குலகின் நிதி, பொருளாதாரத் தடைகளால் மிகவும் ஒதுக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மொஸ்கோவுக்கு அந்தநெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியா கைகொடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போதைய உலக நெருக்கடி ரஷ்யாவின் மசகு எண்ணெய்யை மலிவான விலைக்கு வாங்கக் கூடிய வாய்ப்பை இந்தியாவுக்குத் திறந்து விட்டுள்ளது.

எண்ணெய்யையும் ஏனைய ரஷ்ய ஏற்றுமதிகளையும் இந்தியா வாங்கவுள்ளது என்பதை டில்லி அதிகாரிகள்உறுதிப்படுத்தி உள்ளனர்.ரஷ்யாவுடன் ரூபிள் – இந்திய ரூபாய்(rupee-rouble) பணப் பரிமாற்றத்தின்அடிப்படையில் பொருள்களை வாங்குவது தொடர்பில் மோடி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

உக்ரைன் போரில் இந்தியாவை ரஷ்யாவுக்கு எதிர்ப்பக்கமாகத் தள்ளி வைத்திருப்பதற்கே அமெரிக்கா விரும்புகிறது.ஆனால் இந்தியா அதன் ஆயுதங்கள் வெடிமருந்து முதல் ஏவுகணைகள், போர்விமானங்கள் வரையான அனைத்துக்கும் ரஷ்யாவோடு நெருங்கிய வர்த்தகப்பங்காளியாக இருந்து வருவதை மேற்குலகம் ஏற்றுக்கொள்கிறது.

ஆயினும் சமீபகாலங்களில் இந்தியா அதன் இராணுவத் தேவைகளுக்கு மொஸ்கோவில் தங்கியிருப்பதைக் குறைப்பதற்காக மேற்குநாடுகள் சில உதவிகளை அதிகரித்திருக்கின்றன. உக்ரைன் மீதான போர் ஆரம்பித்தது முதல் இந்தியா ரஷ்யாவின் பக்கம் நிற்கிறது.

சோசல் மீடியாக்களில் இந்தியமக்களது ஆதரவும் புடினுக்கே அதிகமாகத் தெரிகிறது. ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியாகண்டிக்கவில்லை. போரைக் கண்டித்து ஐ. நா. பாதுகாப்புச் சபையும் பொதுச் சபையும் தீர்மானங்களை நிறைவேற்றியபோது இந்தியா நைசாக விலகியே இருந்தது.

தனது பாதுகாப்புப் படைகளுக்கான 80 வீதமான ஆயுததளபாட உதவிகளுக்காக ரஷ்யாவிடம் தங்கியிருக்கின்ற புதுடில்லி, மொஸ்கோவின் நீண்ட காலக்கூட்டாளி. இந்தியப் படைகள் பயன்படுத்தும் போராயுதங்களில் 60 முதல் 85 வீதமானவை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை.

காஷ்மீர் தொடர்பான சிறு முரண்பாடுகளைத் தவிர சோவியத் காலம் முதல் நீடித்து வருகின்ற இருதரப்பு அரசியல், பொருளாதார, மூலோபாய நெருக்கத்தை அவதானிப்பவர்களுக்கு இப்போது உக்ரைன் போர்க் காலத்தில் டில்லி எடுத்துள்ள நிலைப்பாடுகள் ஆச்சரியமளிக்கப் போவதில்லை

.——————————————————————- –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 16-03-2022

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More