Home இலங்கைநல்லூர் பிரதேச சபையின் , சர்வதேச மகளிர் தினமும், சாதனைப் பெண்கள் கௌரவிப்பும்

நல்லூர் பிரதேச சபையின் , சர்வதேச மகளிர் தினமும், சாதனைப் பெண்கள் கௌரவிப்பும்

by admin

நல்லூர் பிரதேச சபையின் , சர்வதேச மகளிர் தினமும், சாதனை பெண்கள் கௌரவிப்பும் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.நல்லூர் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் சபை உறுப்பினர் கௌசலா சிவா தலைமையில் இடம்பெற்ற அந்நிகழ்வில் முதன்மை பெண் விருந்தினர்களாக பேராசிரியர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், ஓய்வு நிலை விரிவுரையாளர் கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன், யாழ்ப்பாண பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சுலோச்சனா முருகநேசன், நல்லூர் பிரதேச செயலாளர் ஏழிலரசி அன்ரன் யோகநாயகம், வடமாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுஜீவா சிவதாஸ், நல்லூர் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி துவாரகா சுதன் மற்றும் யாழ். பல்கலைகழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச தவிசாளர் ப.மயூரன் , சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More