Home இலங்கையாழ்ப்பாண கோட்டையில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி

யாழ்ப்பாண கோட்டையில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி

by admin

தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி யாழ்ப்பாண கோட்டையில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


குறித்த கண்காட்சியினை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர் தஞ்சா கோங்கிரிஜ்ப்திறந்து வைத்தார். இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், ஓய்வு பெற்ற வரலாற்று துறைப் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More