Home இலங்கைஉள்ளூராட்சி சபை பெண்களுக்கான வில் கிளப்பின் ஜந்தாவது அமர்வு

உள்ளூராட்சி சபை பெண்களுக்கான வில் கிளப்பின் ஜந்தாவது அமர்வு

by admin

உள்ளூராட்சி சபை பெண்களுக்கான வில் கிளப்பின் ஜந்தாவது அமர்வும் தேவைகள் மற்றும் வளங்களைக் கண்டறிதல் தொடர்பான ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

இதன்போது தற்கால பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் அதை எதிர்கொள்வதற்கான சூழலை உருவாக்குவதில் சமூகத்தின் பங்களிப்பு எனும் தலைப்பில் பொருளாதார ஆலோசகர் மரியாம்பிள்ளை செல்வின் இரேனியல் சிறப்புரையாற்றினர்.

யாழ் சமூக செயற்பாட்டு மையம் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றின் உதவியுடன் சேர்ச் போர் கொமன் கிரவுண்ட் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது. இது கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு செயற்பாடாகும்.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More