Home இலங்கைமகிந்தவின் பதவி ரணிலிடம்?

மகிந்தவின் பதவி ரணிலிடம்?

by admin

பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ள நிலையில் , பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, பிரதமர் பதவியை துறப்பார் எனவும் அதன்பின்னர், அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை , தேசிய அரசாங்கமொன்றை நிறுவி, பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவது தொடா்பாக கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் ரீதியில் மாற்றங்களை   சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,  மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைக்கமையவே இவ்வாறு அரசியல் மாற்றம் செய்யப்படவிருப்பதாக அந்த அ தகவல்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More