Home இலங்கைபுலிகளை உயிர்ப்பிக்க முனைந்தனர்? 359 மில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கம்!

புலிகளை உயிர்ப்பிக்க முனைந்தனர்? 359 மில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கம்!

by admin

விடுதலைப் புலிகளை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய முனைந்த குற்றச்சாட்டில் கைதான நால்வரின்  359 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அமலாக்க பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

புலிகளை மீள் உருவாக்கம் செய்யும் ஒரு பகுதியாக, போதைபபொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் நான்கு இந்தியர்கள்களின் மீது குற்றம்சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை படகில் இருந்து 300 கிலோ போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

இதன் பொது கைதான  சுரேஷ் ராஜ் ஏ, சத்குணம் என்கிற சபேசன், ரமேஷ் ஏ மற்றும் சௌந்தர் என்ற சவுந்தரராஜன் ஆகியோரின் ஆறு வீடுகள், வாகனங்கள்,  பணம், வங்கி வைப்புத்தொகைகள் என்பன பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

 சுரேஷ் ராஜ், சத்குணம் அவர்களது நண்பர்களுக்காக, படகில் கடத்தப்பட்ட போதைப்பொருள் – ஆயுதங்களின்  விற்பனையின் மூலம்  வருமானம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த  வருமானத்தில் மேலதிக போதைப் பொருள்களை வாங்குவதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை புத்துயிர் பெறச்செய்வதற்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சுரேஷ் ராஜ் ஏ. மற்றும் சத்குணம் ஆகியோர் முன்பு போதைப்பொருள் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்றும், சௌந்தரராஜன் மீது கிரிமினல் வழக்கும் நிலுவையில் இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More